Sivakarthikeyan

கலைத்துறையில் சிறந்த விளங்குபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ‘கலைமாமணி’ விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு கலைமாமணி விருது பெறுவோர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்த ஆண்டு விருது பெறுபவர்கள் விவரம் - நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு, பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, சமகாலத்து நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா, இசையமைப்பாளர்கள் டி இமான், தினா, பாடகர்கள் சுஜாதா, அனந்து, இயக்குநர் கௌதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா,சீரியல் நடிகர் நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ் மற்றும் நித்யா, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஐசரி கணேஷ், ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ், நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமக்கோடியான், காதல் மதி, வசனகர்த்தா விபிரபாகர்.

Advertisment

விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் நாளை (20.02.2021) மாலை தலைமைச் செயலகம் அழைக்கப்பட்டுள்ளனர்.