திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், திரையரங்குகள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனத்தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் சார்பில் வைத்துள்ள கோரிக்கை மனுவில், மல்டிபிளக்ஸ் ஏசி திரையரங்குகளுக்கு ரூ. 250 ஆகவும் ஏசி அல்லாத திரையரங்குகளுக்கு ரூ.150 ஆகவும் கோரிக்கை.
அதே சமயம் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏசி தியேட்டருக்கு ரூ. 200, ஏசி அல்லாத திரையரங்குகளுக்கு ரூ.120, ஐமேக்ஸ் (IMAX), திரையரங்கில் - ரூ.450, எபிக் (EPIQ) திரையரங்கில் - ரூ.400, சாய்வு இருக்கை கொண்ட திரையரங்கில் - ரூ.350 ஆக உயர்த்த கோரிக்கை.