tamilnadu film awards update

தமிழக அரசு சார்பில்திரைப்பட விருதுகள், திரைப்படத்திற்கான மானியம், சின்னத்திரை விருதுகள் வழங்கப்படவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கு கால அவகாசம் ஏற்கனவே கடந்த 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இதில் 2019 முதல் 2022 வரை திரைப்பட விருதுகள், 2018 முதல் 2022 வரை சிறிய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட தரமான திரைப்படங்களுக்கு அரசு மானியம், 2015 முதல் 2022 வரை சின்னத்திரை விருதுகள் உள்ளிட்டவை அடங்கும்.

Advertisment

இதையடுத்து விண்ணப்பம் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனத்திரையுலகினர் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

அதில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களைசென்னை கலைவாணர் அரங்கில், முதல் தளத்தில் அமைந்துள்ளதிரைப்படத்துறையினர் நல வாரியத்தில் வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.