அஜித்திற்கு பெப்சி தலைவர் வேண்டுகோள்!

tamilnadu fefsi request ajithkumar

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.இதனைத்தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்காக 20 கிலோவிற்குமேல் உடல்எடையை குறைத்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை வங்கி கொள்ளையை சுற்றி அமைந்துள்ளதாககூறப்படுகிறது. 'ஏகே 61' படத்திற்காகஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் சென்னைமவுண்ட் ரோடுபோன்றபிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படப்பிடிப்புதொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்திற்கு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் இயக்குநர் ஆர்.கே செல்வமணி வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதன்படி 'ஏகே 61' படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தக் கூடாது. தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பை நடத்தி வருவதால் தமிழ்நாட்டில் இருக்கும் பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் படப்பிடிப்பை சென்னையில் நடத்த வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

ACTOR AJITHKUMAR AK61
இதையும் படியுங்கள்
Subscribe