Skip to main content

லியோ பட விவகாரம் - ரெட் ஜெயண்ட் மீது தமிழிசை குற்றச்சாட்டு

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

tamilisai soundararajan about leo movie issue

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் தயாரிப்பில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள லியோ படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சில மொழிகளில் வெளியாகியுள்ளது. 

 

முதல் நாளான இன்று வழக்கம் போல் திரையரங்கம் முன்பு கூடிய ரசிகர்கள் கேக் வெட்டி, பேனர் வைத்து, மேளதாளத்துடன் நடனமாடி, தேங்காய் உடைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். கேரளா, ஆந்திர உள்ளிட்ட சில மாநிலங்களில் காலை 4 மணிக்கே சிறப்புக் காட்சி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் தமிழக அரசு உத்தரவின்படி 9 மணிக்கு சிறப்புக் காட்சி தொடங்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திரையரங்கில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

ஒவ்வொரு பகுதிகளிலும் வித்தியாசமான முறையில் ரசிகர்கள் படத்தை வரவேற்று வரும் நிலையில், புதுக்கோட்டையில் ஒரு தம்பதி திரையரங்கினுள் நிச்சயம் செய்துகொண்ட சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் 20 அடி நீள கேக், பிரியாணி விருந்து என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ், அனிருத், மன்சூர் அலிகான், கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு, வைபவ், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ரசிகர்களுடன் திரையரங்கிற்கு வந்து படத்தை பார்த்து ரசித்தனர். இதனிடையே கேரளாவில் பெண்களுக்கென தனி பிரத்யேக காட்சியும் திரையிடப்பட்டது. 

 

இந்த நிலையில், இந்தப் படம் வெளியானது குறித்து செய்தியாளர்களின் சந்திப்பில் பேசிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "பத்து நாளாக இந்தப் பிரச்சனை தான். பார்க்க-லியோ கேட்க-லியோ போட-லியோ சப்போர்ட் இல்-லியோ அனுமதி இல்-லியோ... இப்படி லியோ லியோ லியோன்னு தான் போய்க்கிட்டு இருக்கு. புதுச்சேரியில் 7 மணிக்கு நாங்கள் அனுமதி கொடுத்தோம். ஆட்சியர் 7 மணிக்கு அனுமதி கொடுத்த பின்பும் சில அழுத்தம் காரணமாக 9 மணிக்கு தான் போட முடிந்தது. அதுவும் தள்ளிப் போகுது. 

 

இந்த அழுத்தம், ரெட் ஜெயண்ட் என்ற தூய தமிழ் பெயர் கொண்ட ஒரு நிறுவனம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தை தாண்டினா பிரச்சனை என்று அங்குள்ள அந்த நிர்வாகத்தினர் என்னிடம் சொன்னாங்க. விளையாட்டை விளையாட்டாக பாருங்க என்று சொல்கிறார்கள். அப்போ சினிமாவை சினிமாவாகத்தானே பார்க்க வேண்டும். அப்படி இல்லாமல் வேறொரு மாதிரி போய்க் கொண்டிருக்கிறது. அதனால் சுதந்திரமான ஆரோக்கியமான சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதை நான் கேள்விப்பட்டதை இங்கு சொல்கிறேன்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்