Advertisment

இளம் சீரியல் நடிகர் தற்கொலை... சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு!

indira kumar

இலங்கைத் தமிழரான இந்திர குமார், சென்னையில் தங்கியிருந்து தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த வியாழக்கிழமை (18 பிப்.) இரவு, நண்பர்களுடன் இணைந்து திரைப்படம் பார்க்கச் சென்ற இந்திர குமார், அன்றைய இரவு நண்பர்களின் அறையிலேயே தங்கியுள்ளார். மறுநாள் காலை வெகுநேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வராததால், நண்பர்கள் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு, இந்திர குமார் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இந்திர குமார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisment

முதற்கட்ட விசாரணையில், திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் இந்திர குமார் விரக்தியில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக அவர் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisment

சித்ரா மற்றும் ஸ்ரீவஸ்தவா சந்திரசேகர் தற்கொலைகளால்ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இந்திர குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TV SERIALS
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe