ஸ்ரீதேவியின் மறைவைத்தொடர்ந்து அரசியல், சினிமா பிரமுகர்கள்மற்றும்பொதுமக்கள் என அனைவரிடத்திருந்தும் இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் அவரது உடல் இந்திய நேரப்படிஇன்று (27-2-18) மாலை 5.30க்கு மும்பை வரலாம் என எதிர்பார்க்கபடுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் எம்பாமிங் எனப்படும் உடல் பதப்படுத்துதல், இறப்பு சான்றிதழ்போன்ற பணிகளால் அவர் உடல் துபாயிலிருந்து இங்கே வர தாமதமாகிறது என கூறப்பட்ட நிலையில் இந்திய மற்றும் தமிழ் சினிமாபிரபலங்கள் அவரது வீட்டிலும் அவரது கணவர் போனி கபூரின்தம்பியான அனில் கபூர் வீட்டிலும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துவந்த வண்ணம் உள்ளனர்.

Advertisment

Rajini at mumbai for Sridevi

kamal at mumbai for sridevi

மேலும் தமிழ் திரையுலகில் நாசர், ஜெனிலியா, நக்மா, ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன்ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே மும்பையில் இருக்கிறார்.ஸ்ரீதேவியின்உடல் மும்பை வந்தடைந்ததும் இறுதி சடங்கில் பங்கேற்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நடிகர் கமல்ஹாசன்ஸ்ரீதேவியின் இறுதி சடங்கிற்காக நேற்று மும்பை சென்றுள்ளார். இப்படி தொடர்ந்து பல பிரபலங்கள் ஸ்ரீதேவி மறைவுக்கு ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.