கலைஞர் 101 - தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மரியாதை

tamil producers council celebrats kalaingar 101 birthday

தி.மு.க.வின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் 101 பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செய்தும் சமூக வலைத்தளப் பக்கங்களில் கலைஞர் குறித்த நினைவுகளையும் பகிர்ந்துள்ளனர்.

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, “ஒரு பூ மலர்வது தனது செளந்தர்யத்தை விளம்பரப்படுத்தவல்ல; சுற்றுச் சூழலுக்குச் சுகந்தம் பரப்ப காற்று கைவீசித் திரிவது தன் இருப்பை இனங்காட்டவல்ல; நாசிகளுக்கெல்லாம் சுவாசம் பரிமாற. மழைத்துளி தரையிறங்குவது இடிகளின் துரத்தலுக்கு அஞ்சியல்ல;

பசித்த வேர்களின் திரவ உணவுக்காக. பூவாய், காற்றாய், மழையாய், இனம், மொழி மீது இயங்கிய தலைவா

உன் நூற்றாண்டை எடுத்துப் பல நூற்றாண்டுகள் உடுத்துக் கொள்ளும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கோபாலபுரம் சி.ஐ.டி காலனியில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மலை தூவி மரியாதை செலுத்தினார்.

இதனிடையே பல்வேறு திரைப்பிரபலங்களும் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

kalaingar tamil producers council
இதையும் படியுங்கள்
Subscribe