Advertisment

தமிழக அரசுக்கு தயாரிப்பாளர்கள் நன்றி!

kadambur raju

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்கா கரோனா வைரஸால் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

Advertisment

இந்தியாவிலும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே 3ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கில் பல நிபந்தனைகளை வைத்து தனி கடைகளையும், மதுபான கடைகளை திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சினிமாத்துறையிலுள்ள தயாரிப்பு சங்கம் சார்பாக போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி தர வேண்டும் என்று ஃபெப்சி மற்றும் தயாரிப்பாளர்களால் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில், திரைப்பட தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை தொடங்க வரும் 11 ஆம் தேதி முதல் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர்களான இயக்குனர் பாரதிராஜா, கலைப்புலி S. தாணு, T.G. தியாகராஜன், K.R., K. முரளிதரன், T. சிவா, K. ராஜன், K.S. ஸ்ரீனிவாசன், PL. தேனப்பன், கதிரேசன், கமீலா நாசர், K.E. ஞானவேல் ராஜா, H. முரளி, K.விஜயகுமார், சித்ரா லக்ஷ்மணன், S.S. துரைராஜ், FEFSI சிவா, YNOT S. சஷிகாந்த், G. தனஞ்செயன், S.R. பிரபு, ராஜசேகர் பாண்டியன், P. மதன், JSK. சதீஷ்குமார், C.V. குமார், விஷ்ணு விஷால், சுதன் சுந்தரம், சுரேஷ் காமாட்சி, இயக்குனர் மனோபாலா, M. திருமலை, டில்லி பாபு, S. நந்தகோபால், M. மகேஷ், R.K. சுரேஷ், உதயா, வினோத் குமார், P.S. ரகுநாதன், லிப்ரா ரவீந்தரன், P.ரங்கநாதன், M.S. முருகராஜ், Dr. பிரபு திலக், K.S. சிவராமன், நிதின் சத்யா, ராதாரவி, பஞ்சு சுப்பு, இயக்குனர் மனோஜ் குமார், மதுரை செல்வம், பஞ்ச் பரத், ‘கின்னஸ் பாபு’ கணேஷ், M. கஸாலி மற்றும் P.G. முத்தையா ஆகியார் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “மாண்புமிகு முதலமைச்சர் அமைச்சர் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களளின் பணிவான வணக்கம். கரோனாவின் பாதிப்பினால் 50 நாட்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. இந்த நிலையில் கடந்த மே 4-ம் தேதி குறைந்த பட்சம் படப்பிடிப்பு இல்லாத பணிகளான போஸ்ட்-புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி வழங்கினால், ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து இந்த பணிகளுக்காக 50 நாட்களாக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அவைகளை முடித்து, படங்களை தயார் செய்ய முடியும் என்று தங்களிடம் கோரிக்கை வைத்திருந்தோம்.

எங்களின் கோரிக்கையை கனிவாக கவனித்து உடனே நடவடிக்கை எடுத்து, நாங்கள் கேட்டுக்கொண்டது போலவே, தமிழ் திரைப்பட துறை போஸ்ட் புரோடக்ஷன் பணிகளை 11.5.2020 முதல் செய்து கொள்ள தாங்கள் அனுமதி அளித்து, தமிழ் சினிமாவை காக்கும் செயலை செய்ததற்காக எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த நேரத்தில் எங்களின் கோரிக்கையை தங்களின் கவனத்திற்கு உடனே கொண்டு வந்து அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க அணைத்து முயற்சிகளையும் செய்த மாண்புமிகு அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

kadambur raju
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe