Advertisment

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் ரஜினிக்கு கடிதம்

Tamil Nadu theater owners request to Rajinikanth regards jailer movie

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர். முன்னணி பிரபலங்கள் ஒன்றாக நடித்துள்ளதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் 'காவாலா', 'ஹுக்கும்', 'ஜூஜூபி' உள்ளிட்ட பாடல்கள் முன்னரே வெளியான நிலையில், கடந்த 28 ஆம் தேதி படத்தின்8 பாடல்களும் வெளியானது. இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், சூப்பர் ஸ்டார் பட்டம், குட்டி ஸ்டோரி, மது ஒழிப்பு ஆகியவைகுறித்து ரஜினி பேசியது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தைத்தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட ரஜினி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத்தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து விரைவில் ரஜினி விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe