Tamil Nadu  history voice of KamalHaasan ChessOlympiad 2022

மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று (28/07/2022) தொடங்குகின்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 350 அணிகள் பங்கேற்கின்றனர். ஆடவர் பிரிவில் 188 அணிகளும், மகளிர் பிரிவில் 162 அணிகளும் விளையாடவுள்ளன. இந்தியா சார்பில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தலா மூன்று அணிகள் களமிறங்குகின்றன.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="24a0d3dd-73bf-4c10-b938-16001711b34d" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Jothi-Movie-500-X-300-Ad_15.jpg" />

Advertisment

இதனையொட்டி ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்கும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டையில் மேடைக்கு வந்துள்ளார். மேலும் இவ்விழாவில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்விழாவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் வரலாறு குறித்த சிறப்புத் தொகுப்புக்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.