ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைதன்யா தயாரிப்பில்அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில் மறைந்த நடிகர் பூ ராமு, காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிடா'. இப்படத்தை ரா.வெங்கட் இயக்கியுள்ளார். மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோராமா என்ற பிரிவில்ஜெய்பீம் படத்துடன் 'கிடா' படம் தேர்வாகியுள்ளது. இப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோவா திரைப்படவிழாவில் இந்தியன் பனோராமா பிரிவில் மூன்று தமிழ்ப் படங்களில்ஒரு படமாக இப்படம் தேர்வாகியுள்ளது.