Skip to main content

கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டிய பயில்வான் ரங்கநாதன்; கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

tamil makkal iyakkam k rajan complains against Bayilvan Ranganathan

 

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக அறியப்பட்டவர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமா துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை யூடியூப் தளத்தில் பகிர்ந்து வருகிறார். நடிகர்கள் பற்றிய இவரின் பேச்சு எல்லையை மீறி போவதாக கூறி பலரும் புகார் கூறி வருகின்றனர். 

 

இந்நிலையில் நடிகர் பயில்வான் ரங்கராஜன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் கே.ராஜன் புகார் அளித்துள்ளார். அதில், சமீப காலமாக யூடியூப் சேனல்களில் பெண்களுக்கும் திரைப்பட நடிகர்கள், நடிகைகளுக்கும் எதிராக ரகசியங்களை வெளியிடுகிறேன் என்று சொல்லி பொய்யான செய்திகளை  பயில்வான் ரங்கநாதன் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசி வருகிறார். இதனால் பல பெண்கள் திரைப்பட நடிகர், நடிகைகள் மிகவும் வேதனையுடன் மன உளைச்சலில் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் காசுக்காக இந்த செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

 

அந்தவகையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், "என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது, என்னை யாராவது தாக்க வந்தால் அரிவாளால் அவர்களின் கழுத்தை அறுத்து விடுவேன், நான் தூத்துக்குடிக்காரன்" என எல்லா பெண்களையும், அச்சுறுத்தி இருக்கிறார். அதனால் பாதிக்கப்பட்ட நடிகர், நடிகைகள் அவர் மீது புகார் அளிக்க அஞ்சுகிறார்கள். இதனால் அவரின்  பேச்சும் செயலும் வன்முறையை தூண்டி சட்டம் ஒழுங்கை பாதிக்கச் செய்வதால், பயில்வான் ரங்கநாதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றிய காவலர்; நேரில் அழைத்துப் பாராட்டிய கமிஷனர்!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
The policeman who saved the incident victim The commissioner called and praised in person

சென்னை பெருநகர காவல்துறையின் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் இரண்டாம் நிலைக் காவலரான விக்னேஷ் பாண்டி என்பவர் காசிமேடு காவல் வாகனத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 20 ஆம் தேதி மாலை (20.02.2024) மாலை சுமார் 06.30 மணியளவில் காசிமேடு எஸ். என்.செட்டி ரோட்டில் காவல் வாகனத்தில் ரோந்து பணியில் இருந்துள்ளார்.

அச்சமயம் அவ்வழியே நடந்து சென்ற நபர் மீது ஒரு ஆட்டோ மோதியதில் அந்த நபர் நிலைதடுமாறி சாலையில் விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதனைக் கண்ட காவலர் விக்னேஷ் பாண்டி சுயநினைவின்றி கீழே விழுந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். இதனால் அவருக்கு சுயநினைவு திரும்பியது. அதன் பின்னர் தன்னுடன் பணியில் இருந்த காவலர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவருக்கு குடிநீர் கொடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் விபத்தில் சிக்கி சுயநினைவின்றி கிடந்தவருக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய காவலர் விக்னேஷ் பாண்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “விபத்தில் சிக்கியவருக்கு சி.பி.ஆர். மற்றும் முதலுதவி கொடுத்து ஒரு உயிரைக் காப்பாற்றிய இரண்டாம் நிலை காவலர் விக்னேஷ் பாண்டிக்கு ஒரு பெரிய சல்யூட். காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், காவலர் விக்னேஷ் பாண்டியின் வீரச் செயலைப் பாராட்டினார். விக்னேஷ் பாண்டி உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ -  போலீஸ் கமிஷனர்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Strict action will be taken against those selling products Police Commissioner

சென்னை மாநகரில் கடந்த 7 நாள்களில் நடைபெற்ற சிறப்பு சோதனையில் 160 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னைப் பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ (DABToP - Drive Against Banned Tobacco Products) என்ற சிறப்பு சோதனை மேற்கொண்டு புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 29.01.2024 முதல் 04.02.2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 160 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 24 கிலோ மாவா, ரொக்கம் 22ஆயிரத்து 180 ரூபாய், 4 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ மற்றும் 1 இலகு ரக சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உட்பட சட்டவிரோத பொருட்களை கடத்திவருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.