Advertisment

தமிழ் படத்திற்கு புதுச்சேரி அரசு விருது...

parthiban

இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக தருபவர்.ஹவுஸ்புல், ‘கதைதிரைக்கதை வசனம் இயக்கம்'போன்ற படங்கள்அதற்குஉதாரணம். இவர் கடைசியாக ‘ஒத்த செருப்பு’ படத்தைஎழுதி, இயக்கி, நடித்திருந்தார்.

Advertisment

பார்த்திபன்ஒருவர் மட்டுமேநடித்திருந்த இப்படத்தை,அவரேதயாரித்திருந்தார். உலக சினிமா வரலாற்றில், இதற்குமுன்புஒருவர் மட்டுமேநடித்து வெளிவந்தபடங்கள்வெறும் பனிரெண்டுதான்.பார்த்திபனின் இந்த முயற்சி, ஆசியா புக்ஆப்ரெக்கார்ட்ஸ்புத்தகத்தில் இடம்பெற்றது மட்டுமில்லாமல் பல்வேறு விருது விழாக்களுக்கும்தேர்வு செய்யப்பட்டது.

Advertisment

இந்தநிலையில் தற்போது,புதுச்சேரிமாநிலஅரசின்,சிறந்தபடத்திற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதை ஒத்த செருப்புபடம் வென்றுள்ளது. 2019 ஆம் ஆண்டின்சிறந்தபடமாக, இப்படத்தை புதுச்சேரிஅரசு தேர்ந்தெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், புதுச்சேரிமாநிலமுதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர்தனதுட்விட்டர் பதிவில், " புதுச்சேரி அரசின்சிறந்தபடத்திற்கான விருது, ஒத்த செருப்பு-க்கு. அம்மாநிலமாண்புமிகு முதல்வருக்கும், தேர்வு செய்தவர்களுக்கும் மனநிறை நன்றி" என கூறியுள்ளார்.

ACTOR PARTHIBAN
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe