Advertisment

தயாரிப்பாளர் சங்க தேர்தல்; இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

tamil film producers council election candidates list update

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தற்போது 'தேனாண்டாள் ஸ்டூடியோஸ்' முரளி ராமசாமி தலைமையில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்திற்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வரும் நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் வருகிற 30ம் தேதி (30.04.023)அன்று நடைபெறவுள்ளது.

Advertisment

இந்த நிலையில் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களுக்குப் போட்டி நடக்கிறது. தலைவர் பதவிக்கு, தற்போது தலைவராக இருக்கும் முரளி ராமசாமி மற்றும் செயலாளராக இருக்கும் மன்னனும் போட்டியிடுகிறார்கள்.

Advertisment

துணைத் தலைவர் பதவிக்கு, தமிழ்குமரன், அர்ச்சனா கல்பாத்தி, கலைப்புலி சேகரன், ராஜேஷ்வரி வேந்தன், விடியல் ராஜூ ஆகியோர் போட்டியிடுகிறார்கள். செயலாளர் பதவிக்கு கமீலா நாசர், எஸ்.கதிரேசன், கே.கதிரேசன், ராதாகிருஷ்ணன், பி.எல்.தேனப்பன் போட்டியிடுகின்றனர். 26 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு77 பேர் போட்டியிடுகிறார்கள்.

Tamil Film Producers Council
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe