
2023-2026 ஆண்டுக்கான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் கடந்த 30.04.2023 அன்று நடைபெற்றது. இதில் தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களுக்குப் போட்டி நடந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் வாக்களித்தனர். இந்தத் தேர்தலில் மொத்தம் 1111 வாக்குகள் பதிவாகி இருந்தன.
நலம் காக்கும் அணி சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட 'தேனாண்டாள்' முரளி ராமசாமி 615 வாக்குகளும், துணைத் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்ட ஜிகேஎம். தமிழ்குமரன் 651 வாக்குகளும், அர்ச்சனா கல்பாத்தி 588 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். செயலாளர்கள் பதவிக்குப் போட்டியிட்ட 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன் 617 வாக்குகளும், ராதாகிருஷ்ணன் 503 வாக்குகளும் பெற்றனர்.
இதில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்ட லைகா நிறுவன தலைமை நிர்வாகி ஜிகேஎம். தமிழ்குமரன் 651 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இதுவரை நடந்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று சாதனை வெற்றி படைத்துள்ளார் தமிழ்குமரன்.