tamil director ashokan passed away

தமிழ் சினிமாவில் 'தமிழச்சி', 'பொன்விழா', உள்ளிட்ட உள்ளிட்ட சில திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளவர் இயக்குநர் எஸ்.அசோகன். குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளியான 'குண்டக்க மண்டக்க' படம் பலராலும் ரசிக்கப்பட்டது. இவருக்கு ராஜலெட்சுமி என்ற மனைவியும் பகவத் கீதன் என்ற மகனும் உள்ளனர்

Advertisment

இந்நிலையில் சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் வசித்து வந்த எஸ்.அசோகன் (64) இன்று மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சென்னையிலிருந்து எடுத்து வரப்பட்டு அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை தெற்கு தெரு இல்லத்தில் வைக்கப்பட்டு அஞ்சலிக்கு பின் இன்றிரவு இறுதிச் சடங்குகள் நடைபெற்வுள்ளன. இவரது மறைவுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.