rajni

நடிகர்ரஜினிகாந்த், ஜனவரியில் கட்சி ஆரம்பித்துஅரசியலில்ஈடுபடவுள்ளதாக இன்று அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, சினிமாத் துறையைச் சார்ந்தபல்வேறு பிரபலங்கள், ரஜினிகாந்தின் அரசியல் வருகையைவரவேற்றும், அவரை வாழ்த்தியும் கருத்துகளைத்தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இசையமைப்பாளர் அனிருத், "இனிதான் ஆரம்பம், தலைவர் ஆட்டம் ஆரம்பம் என 'பாபா' முத்திரையோடு" தனதுட்விட்டர் பக்கத்தில்பதிவிட்டுள்ளார்.

Advertisment

ரஜினியை வைத்து, 'பேட்ட' படத்தைஇயக்கிவருபவரும், ரஜினியின் தீவிரரசிகருமான கார்த்திக்சுப்புராஜ், "வாவ்தலைவா... வா தலைவா!" எனட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் கட்சித் தொடங்கும்அறிவிப்பை வரவேற்றுள்ளநடிகரும்- நடனஇயக்குனருமான ராகவாலாரன்ஸ், "இந்தத் தருணத்திற்காகக் காத்திருந்த உங்களின்கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும்ஒருவன். உங்கள் லட்சியங்கள் அனைத்தும் நிறைவேற, நான் ராகவேந்திரா சாமியை வேண்டிக் கொள்கிறேன். இந்தக் கடினமான கரோனாகாலத்திலும், உங்கள் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் மக்களுக்குச் சேவை செய்ய முன்வந்துள்ளீர்கள். உங்கள் கனவுநிச்சயமாக நிறைவேறும்" எனக் கூறியுள்ளார்.

Advertisment

cnc

இயக்குனர் லிங்குசாமி, "புலி வருது... புலி வருதுனுசொன்னாங்க. ஆனா, இப்போசிங்கமே வந்துருச்சு. வாழ்த்துகள்சார்" எனரஜினியின் அரசியல் வருகைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கே.பாலச்சந்தரின் கவிதாலயா பட நிறுவனம், "ரஜினிதனது அரசியல் பயணத்திலும் மிகப்பெரிய வெற்றியைப்பெற வேண்டும்" எனக் கூறியுள்ளது.

பின்னணி பாடகர்க்ரிஷ், "வாருங்கள்தலைவா, வாருங்கள்... மாற்றத்திற்கான நேரம்"எனரஜினியின் அரசியல் வருகையைவரவேற்றுள்ளார்.