Advertisment

கத்தி முனையில் நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் - இருவர் கைது

tamil actress jewels theft issue case

சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிக்கும் துணை நடிகை ஒருவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் இருவர் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அத்துடன் அந்த நடிகையின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க நகையையும் பறித்து சென்றுள்ளனர். மேலும் அவரைசெல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நடிகை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தபுகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில்உள்ள சிசிடிவி உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில்ஒருவரான ராமாபுரம்பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவரைகைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டாவது நபர் அய்யப்பாக்கம்பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பது தெரியவந்தது.

Advertisment

இதனைதொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் துணை நடிகையின் வீட்டிற்குசென்று பணம் மற்றும் நகைகள் கொள்ளையடித்ததுடன்கத்தியை காட்டி அவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதுதெரியவந்தது. அதன் பின்பு இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது ஐ.பி.சி. சட்டபிரிவு 376 மற்றும் 397 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணம்மீட்கப்பட்டு துணை நடிகையிடம்ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தற்போது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Actress Sexual Abuse tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe