Advertisment

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை

tamil actress Akila Narayanan joined US Army

Advertisment

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ’காதம்பரி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அகிலா நாராயணன், நடிப்பதோடு மட்டுமின்றிபிரபல பாடகியாகவும் வலம் வந்தார். இதனையடுத்துகலைத்துறையோடு தனது பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல், ராணுவத்தில் இணைய வேண்டும் என்று முடி செய்தார்.

மிகக் கடினமான பயிற்சிகளைக் கொண்ட அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெறுவது என்பது மிக சவாலானது என்றாலும், தனது மகளின் விருப்பத்துக்கு அகிலாவின் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்க, கடுமையான பல மாத பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்ற அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை அகிலா நாராயணன் பெற்றுள்ளார்.மேலும், இளைய சமூகத்தினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் சமூகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் அகிலா நாராயணன், தான் கற்றதை பிறருக்கும் கற்பிக்கும் வகையில், ‘நைட்டிங்கேள் ஸ்கூல் ஆஃப் மியூசிக்’ (Nightingale School of Music) என்ற இசைப் பள்ளியை ஆன்லைன் மூலம் நடத்தி வருகிறார்.அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான சட்ட ஆலோசகராக செயலாற்ற இருக்கும் அகிலா நாராயணன், தான் வாழும் நாட்டுக்காக சேவை செய்வதற்காகவே இத்துறையில் இணைந்துள்ளார். அவரது இத்தகைய சேவை மனப்பான்மைக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருவதோடு, அவரது குடும்பத்தாரையும் வாழ்த்தி வருகிறார்கள்.

Akila Narayanan tamil cinema USA army
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe