sameksha

Advertisment

'அறிந்தும் அறியாமலும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சமிக்‌ஷா. இதன்பின் 'மனதோடு மழைக்காலம்', 'தீ நகர்', 'மெர்க்குரி பூக்கள்' உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் பாடகர் ஷஹீல் ஆஸ்வலை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார் சமிக்‌ஷா. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திருமணம் சிங்கப்பூரில் ஜூலை 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் சமிக்‌ஷாவின் குடும்பத்தினர் வீடியோ மூலமாகவே கலந்து கொண்டனர்.

Advertisment

ஷஹீல் ஆஸ்வலுக்குத் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளும், சமிஷ்காவுக்கு ஏற்கனவே 1 குழந்தையும் உள்ளனர். இருவருமே முதல் திருமணத்திலிருந்து விவாகரத்துப் பெற்றவர்கள்.