ஆக்ஷன் படத்துக்குப் பிறகு நடிகை தமன்னா அடுத்ததாகத் தமிழில் நடிக்க கதைகள் கேட்டு வரும் நிலையில் இவர் தற்போது 'சீட்டிமார்' என்ற தெலுங்குப் படத்தில் கபடி அணி பயிற்சியாளராக நடித்து வருகிறார்.இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமன்னா பேசும்போது...
''என் வாழ்க்கையிலேயே நான் கபடி ஆடுவேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.தற்போது இந்தக் கதாபாத்திரத்துக்காக நான் முழுமையாக மாறியுள்ளேன்.மொழியிலிருந்து,கபடி ஆட்டத்தைப் பற்றிய நுணுக்கங்கள், உடற்பயிற்சி,விசேஷ பயிற்சி வகுப்பு என நிறைய விஷயங்களைக் கற்று வருகிறேன்.மேலும் இதற்காக நான் தெலங்கானா பேச்சு வழக்கையும்கற்க வேண்டியிருந்தது.இது மிகவும் சவாலாக இருந்து வருகிறது.ஆனால் சரியாகப் பேச படத்தின் இயக்குனர் உதவி செய்வது திருப்தியாக உள்ளது'' என்றார்.