'விஜய்' மற்றும் 'விஜய் சேதுபதி' ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் நடிகர் விஜய் அடுத்ததாக சுறா, சர்கார் படங்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக மூன்றாவது முறையாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சுறா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த தமன்னா, தற்போது தளபதி 65 படம் மூலம் மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி அவர் இசையமைக்கும் பட்சத்தில் இதுதான் விஜய்யுடன் தமன் இணையும் முதல் படமாகும். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யுடன் இணைகிறாரா சுறா நடிகை..?
Advertisment