Advertisment

சொன்னது ஒன்னு, நடக்கிறது ஒன்னா இருக்கு- அதிரடியாக விலகிய தமன்னா

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் பெரும் பட்ஜெட்டில் உருவாகி வரும் சயிரா நரசிம்ம ரெட்டி படத்திலும் இவர் நடிக்கிறார். குயின் தெலுங்கு ரீமேக், தமிழில் விஷாலுடன் என்று தற்போது பல நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

tammanah

இந்நிலையில் தெலுங்கில் ராஜுகாரி காதி படத்தின் மூன்றாம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதன் ஷூட்டிங்கும் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில் பாதியிலேயே தமன்னா இந்த படத்திலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

விலகியதற்கு காரணம் என்ன என்றால், முதலில் தமன்னாவுக்கு சொல்லப்பட்ட கதையில் அவருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் கதையாக இருந்ததால்தான். ஆனால், படத்திற்கு பூஜை போட்ட பின் முழு ஸ்கிரிப்டையே மாற்றியிருக்கிறார் இயக்குநர். இதில் தமன்னாவின் கதாபாத்திரதிற்கும் முன்பைவிட பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. ஸ்கிரிப்டில் மாற்றம் செய்தது தமன்னாவுக்கும் அறிவிக்கப்படவில்லை, இதை ஷூட்டிங்கின்போது அறிந்துகொண்ட தமன்னா படத்திலிருந்து நான் விலகிக்கொள்கிறேன் என்று அதிரடியாக கூறிவிட்டு சென்றுவிட்டாராம். இதனால் படக்குழு மிகவும் அதிர்ச்சியில் உள்ளது.

Advertisment

தமன்னா தரப்பில் கூறுவது என்ன என்றால் என்னிடம் ஒன்று சொல்லிவிட்டு, எடுப்பது வேறாக இருக்கிறது. இதனால் எனக்கு கிடைக்கும் பெரிய வாய்ப்புகளை தவரவிட முடியாது. ஆகவே இந்த படத்திலிருந்து விலகிவிட்டேன் என்கிறாராம். இந்த படம் விலகிய உடனேயே வேறு ஒரு பெரிய படத்திலிருந்து வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamanna
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe