style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழில் கண்ணே கலைமானே மற்றும் தேவி 2 ஆகிய இரண்டு படங்கள் கைவசம் வைத்திருக்கும் தமன்னா தற்போது குயீன் தெலுங்கு ரீமேக்கான தட்ஸ் மஹாலட்சுமி, படத்தை முடித்த கையோடு சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் புரட்சிகர பெண்ணாக நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் குறித்து தமன்னா பேசியபோது.... "சிரஞ்சீவியுடன் நடிக்க வேண்டும் என்கிற எனது கனவை நனவாக்கி இருக்கிறது இப்படம். அதற்காக இயக்குனர் சுரேந்தர் ரெட்டிக்கு நன்றி சொல்ல வேண்டும். சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்தது பெருமையாக உள்ளது. படத்தை திரையில் காண ரசிகர்கள் போல் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார்.