/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Epa0EnNUUAEnjLC.jpg)
அனில் ரவிப்புடி இயக்கத்தில், 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற தெலுங்கு படம் 'எஃப் 2'. காமெடி ஜானரில் உருவாக்கப்பட்ட இப்படத்தில், வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா, மெஹ்ரீன், பிரகாஷ்ராஜ் உட்பட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் இப்படத்திற்குப்பிரம்மாண்ட வெற்றி கிடைத்தது. இதனையடுத்து, இப்படத்தின் அடுத்த பாகம் 'எஃப் 3' எனத் தயாராகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படத்தின் இயக்குனர் அனில் ரவிப்புடிக்கு, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவரது இயக்கத்தில், மகேஷ் பாபு நடித்து வெளியான 'சரிலேரு நீக்கவெரு' படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவ்வெற்றியைத் தொடர்ந்து, 'எஃப்3 படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்திவந்தார் இயக்குனர் அனில் ரவிப்புடி. இந்த நிலையில், இப்படத்தின் பூஜையானது இன்று நடைபெற்றது. இதில், நடிகை தமன்னா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பானது டிசம்பர் 23-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)