tamannaah joining bhola shankar movie

Advertisment

கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் 'வேதாளம்'. இதில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும் லட்சுமி மேனன் அஜித்தின் தங்கையாகவும் நடித்திருந்தனர். மாஸ் எமோஷனல் படமாக தயாரான 'வேதாளம்', வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிபெற்றது.

இந்நிலையில், 'வேதாளம்' படத்தை இயக்குநர் மஹிர்ரமேஷ் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார். இதில், பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அஜித் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில்நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். சமீபத்தில், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், படத்திற்கு 'போலாஷங்கர்' என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ருதிஹாசன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகமுன்னணி நடிகைகளிடம்பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், நடிகை தமன்னா நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்தஅதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிரஞ்சீவி, தமன்னா நடிப்பில் வெளியான 'சைராநரசிம்மா ரெட்டி' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

நடிகர் சிரஞ்சீவி தற்போது 'ஆச்சார்யா', 'காட்ஃபாதர்' படங்களில்நடித்துவருகிறார். இப்படங்களின் பணிகளை முடித்தவுடன் 'போலாஷங்கர்' படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.