Advertisment

''யாரும் பசியுடன் உறங்கச்செல்லக்கூடாது..'' - தமன்னா முடிவு!

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமா துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில் ஏற்கனவே தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்த நடிகை தமன்னா தற்போது 'லெட்ஸ் ஆல் ஹெல்ப்' என்ற அரசு சாரா அமைப்புடன் கைகோர்த்து மும்பையில் உள்ள குடிசைப்பகுதி, முதியோர் இல்லம், காப்பகங்கள், இடம்பெயர்வுத் தொழிலாளர்கள் என 10,000 பேருக்கான 50 டன் உணவுக்கான தொகையை வழங்கியிருப்பது குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

bcbc

''நாங்கள் 'லெட்ஸ் ஆல் ஹெல்ப்' இல் ஒரு உறுதிமொழியை எடுத்துள்ளோம். யாரும் பசியுடன் உறங்கச்செல்லக்கூடாது என்பதை உறுதியாக ஏற்போம். தினக்கூலித் தொழிலாளர்களுக்கு உதவுவதனால், அவர்கள் உணவுக்கு வழியில்லாமல் தங்கள் கிராமங்களை நோக்கி செல்லமாட்டார்கள். நகரங்களிலேயே தங்கிபட்டினி கிடக்கமாட்டார்கள் என நம்புகிறேன். இந்தத் தன்னார்வ அமைப்பின் மூலம் உணவு தேவைப்படும் தொழிலாளர்களுக்குச் சென்றடையும். மேலும் எங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள எங்கள் நம்பகமான கூட்டாளர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும் உணவுப் பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

Tamanna
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe