Advertisment

"இதை எல்லாம் இந்த கரோனா கற்றுக்கொடுத்தது" - தமன்னா அட்வைஸ்!

vdgdsgsd

கடந்த சில மாதங்களாக இந்தியாவை உலுக்கிவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாகதடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்ற நிலையில், நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கரோனா குறித்து பேசியுள்ளார். அதில்...

Advertisment

bgfhdsgds

"ஊரடங்கில் உணவு கிடைக்காமல் பலர் உள்ளனர். அவர்களுக்கு உதவ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவருகிறேன். நான் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பேன். ஆனால், எனக்கும் கரோனா வந்தது. சத்தான உணவாலும், திடமான மனதாலும் அதிலிருந்து நான் மீண்டேன். உணவு, தூய்மை, ஆரோக்கியத்தில் இன்னும் எச்சரிக்கையாக இருக்க இந்தக்கரோனா கற்றுக்கொடுத்தது'' என கூறியுள்ளார்.

Advertisment

Tamanna
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe