Advertisment

"யாரும் பதற்றமடைய வேண்டாம்" - தமன்னா அறிவுரை

Tamannaah Bhatia about lust stories 2

தமன்னா, மிருணாள் தாக்கூர், கஜோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2'.ஆர்.பால்கி, கொங்கோனா சென் சர்மா உள்ளிட்ட நான்கு பேர் இயக்கியுள்ள இத்தொடர் வருகிற 29ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Advertisment

இதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு பிசியாக உள்ளது. அந்த வகையில் ஒரு ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் தமன்னா, "இத்தொடரை பார்க்கும் போது உங்கள் அறைக்கு யாரேனும் வந்தால் பதற்றமடைய வேண்டாம். மேலும் தொடரை பாதியில் நிறுத்த வேண்டாம். இதில் காமத்தை விட காதல், ஆக்‌ஷன் உள்ளிட்டவை இருக்கிறது. மேலும் அம்மாவின் காதல், பாட்டியின் காதல், வேலைக்காரியின் காதலும் இருக்கிறது. அதனால் பார்த்து மகிழுங்கள்" என அறிவுரை பேசுகிறார்.

Advertisment

முன்னதாக இத்தொடரின் ட்ரைலர் வெளியான போது முத்தக்காட்சி மற்றும் கதாநாயகனுக்கு நெருக்கமான காட்சிகளில் தமன்னா கவர்ச்சியாக நடித்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. பின்பு கதைக்கு தேவைப்பட்டதால் நடித்ததாக விளக்கமளித்திருந்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Bollywood web series Tamanna
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe