Advertisment

மறைந்த நடிகை வாழ்க்கை வரலாற்றில் தமன்னா?

Tamannaah in actress jamunas bio pic

பழம்பெரும் தெலுங்கு திரையுலக நடிகை ஜமுனா கடந்த 27 ஆம் தேதிகாலமானார். பல இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 198 படங்களில் நடித்துள்ள ஜமுனா தமிழில்சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்நடிப்பில் வெளியான'தெனாலிராமன்', 'தாய் மகளுக்குக்கட்டிய தாலி' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் நடிகைஜமுனாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கும் முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம்ஜமுனா கதாபாத்திரத்தில் தமன்னாவை நடிக்க வைப்பதாக முடிவெடுத்து அவரிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisment

முன்னதாக மறைந்த நடிகைகள் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு 'மகாநதி' என்ற தலைப்பிலும், நடிகையும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு'தலைவி' என்ற தலைப்பிலும் வெளியானது.ஜமுனாவும் சினிமாவைத்தாண்டி அரசியலிலும் பயணித்தவர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1989 ஆம் ஆண்டு ராஜமுந்திரி மக்களவைத்தொகுதியில் அக்கட்சியின் சார்பாக போட்டியிட்டுவெற்றி பெற்றார். பின்பு பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில்செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

biography Actress Tamanna
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe