tamannaa about his love rumours with vijay varma

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட சில இந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வந்த தமன்னா.,தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் 'போலா ஷங்கர்', இந்தியில் இவர் நடிப்பில் 'போலே சூடியன்' மற்றும் மலையாளத்தில் 'பாந்த்ரா' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

தமன்னா குறித்து அவ்வப்போது திருமண வதந்திகள் உலா வரும். சமீபகாலமாக அதிகம் வரத்தொடங்கியுள்ள நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில்இது குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், "எனக்கு எதிராக நிறைய வதந்திகள் பரவுகின்றன. குறிப்பாக அனைத்து தகவலிலும் எதிர்மறை விமர்சனங்கள் அதிமாகிவிட்டன. இதையெல்லாம் யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை.

Advertisment

நான் காதலிப்பதாக தகவல் பரப்புகிறார்கள். அதை படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது. ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்" என்றுள்ளார். சமீபத்தில் ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவுடன் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.