தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது இந்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா. குறிப்பாக ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடனும் தெலுங்கில் அல்லு அர்ஜூன், ராம் சரண், பிரபாஸ் உள்ளிட்ட நாயகர்களுடனும் நடித்து பிரபலமானார். 

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “ஒரு கட்டத்தில் நான் ஒரு பெரிய தென்னிந்திய நடிகருடன் நடித்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு சில காட்சிகள் எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால் அதில் நான் நடிக்க முடியாது என்றேன். உடனே அந்த நடிகர் நாயகியை மாற்ற சொல்லிவிட்டார். 

யாராவது உங்களை அவமானப்படுத்த முயற்சித்தால், அவர்கள் நினைப்பது போல் நாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அடுத்த நாள் அந்த நடிகர், தாமாகவே வந்து மன்னிப்பு கேட்டார். கோபமாக இருந்ததால் அப்படி நடந்து கொண்டதாக வருத்தப்பட்டார்” என்றார்.