இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு விஜய்யின் பிகில், கார்த்தியின் கதை படங்கள் வெளியாகிறது. முதலில் இந்த திரைப்படங்களுடன் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் படம் வெளியாவதாக இருந்தது. ஆனால், சங்கத் தமிழன் படக்குழு திடீரென தீபாவளி ரிலீஸ் இல்லை என்று அறிவித்துவிட்டது.

Advertisment

tamanna

இந்நிலையில், இவ்விரு படங்களுடன் தமன்னாவின் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படமும் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். `அதே கண்கள்' படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன், இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

Advertisment

super duper

திகில் கலந்த காமெடியுடன் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் யோகி பாபு, முனீஸ்காந்த், சத்தியன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஈகிள்ஸ் ஐ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.