Published on 26/08/2020 | Edited on 26/08/2020

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக நடித்து வரும் தமன்னா. தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 14 -ஆம் தேதி தனது தந்தையின் பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சினிமா ஷூட்டிங் எதுவும் நடைபெறாத நிலையில் வீட்டிலேயே இருக்கும் தமன்னா தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
இந்நிலையில் தமன்னா, தன் பெற்றோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும். “குடும்பத்திற்கே டெஸ்ட் எடுத்தோம், அதில் எனக்கு நெகட்டிவ் என்று வந்துவிட்டது. பெற்றோரைத் தவிர மற்ற அனைவருக்கும் நெகட்டிவ் என்று வந்துவிட்டது. அவர்கள் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறு” கேட்டுக் கொண்டுள்ளார்.