நாம் ஒன்றாக வேலை செய்யலாமா என்று எந்த ஒரு ஹீரோவிடமும் நான் கேட்பதில்லை. ஆனால்.. ' - தமன்னா 

tamanna

ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் 'கண்ணே கலைமானே'. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதில் நாயகி தமன்னா பேசும்போது....

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

"ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர், இந்த படத்துடனும், மொத்த குழுவுடனும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இன்று காலை, வேறு ஒரு புதிய படத்தை பார்ப்பது போல் இருந்தது. நான் மிகவும் திருப்தியடைந்தேன். சீனு ராமசாமி சார் படத்தில் பல உணர்வுகளைக் கையாண்டிருக்கிறார். சப்டைட்டில் இல்லாமல் இந்த படத்தை பார்த்தால் கூட ஒருவர், இந்த படத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும், அதை விரும்பவும் முடியும் என நான் நம்புகிறேன். இன்னமும் பாரதி கதாபாத்திரம் எனக்குள் இருக்கிறது. வழக்கமாக, நாம் ஒன்றாக வேலை செய்யலாமா என்று எந்த ஒரு ஹீரோவிடமும் நான் கேட்பதில்லை. ஆனால் நான் இப்போது உங்களின் அடுத்தடுத்த படங்களில் நடிக்க என்னை பரிசீலனை செய்யுங்கள் என சீனு ராமசாமி சாரிடம் கோரிக்கை வைக்கிறேன். யுவன் ஷங்கர் ராஜா என் சினிமா வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறார். பாடல்களும் படத்தில் கதாபாத்திரங்கள் போல தான் இருக்கும். ஒளிப்பதிவாளர் ஜலந்தர் சார் என்னை மிகவும் அழகாக காட்டியிருக்கிறார். இந்த படத்தை தயாரித்த உதயநிதி சாருக்கு என் நன்றி, சீனு சார் குறுகிய காலத்திற்குள் இத்தகைய ஒரு அழகிய படத்தை எடுத்திருப்பதை பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது" என்றார்.

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/6s8XzZxKFx0.jpg?itok=9FjhwxN4","video_url":" Video (Responsive, autoplaying)."]}

seenuramasamy udhayanidhistalin kannekalaimaane
இதையும் படியுங்கள்
Subscribe