tamanna bhatia ad issue case

பிரபல நகைக்கடை நிறுவனத்தின் விளம்பர மாடலாக நடிகை தமன்னா நடித்திருந்தார். ஆனால் அந்த நிறுவனம் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் தான் நடித்த விளம்பரத்தைப் பயன்படுத்தி வருவதாகக் கூறி அதற்குத் தடை விதிக்க வேண்டும் என தமன்னா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த நகைக்கடநிறுவனத்திற்கு தமன்னாவின் விளம்பரங்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து நீதிமன்ற தடை உத்தரவிற்கு பிறகும் தனது விளம்பரத்தை அந்த நகைக்கடை நிறுவனம் பயன்படுத்தி வருவதாகக் கூறி தமன்னா சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

Advertisment

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நகைக்கடை நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் நிறுவன தரப்பில் மனுதாரரின் விளம்பரத்தை நிறுத்தி விட்டதாகவும் ஆனால் சமூக ஊடகங்களில் எங்களின் பழைய விளம்பரங்களைத் தனிநபர் பயன்படுத்துவதற்கு தாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது எனவும் வாதிட்டார். இதையடுத்து நகைக்கடை நிறுவனம் தமன்னாவின் மனுவிற்குப் பதிலளிக்கும் படி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையைச் செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதே போல் வேறொரு நிறுவனமும் தான் மாடலாக நடித்த விளம்பரத்தை ஒப்பந்த காலம் மீறியும் பயன்படுத்துவதாகவும் அதனால் அதற்குத் தடை விதிக்க கோரியும் தமன்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம். இந்த உத்தரவை எதிர்த்து தமன்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம் சுந்தர் மற்றும் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் எதிர் தரப்பினர் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கின் விசாரணையைச் செப்டம்பர் 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisment