nf

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்கள் எதுவும் வெளிவராமல் இருக்கின்றன. இந்நிலையில் சூர்யாவின் '2டி' தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்மகள் வந்தாள்' படம் கரோனா காரணமாக தியேட்டரில் வெளியாவதில் சிக்கல் இருந்ததால் அமேசான் நிறுவனம் இப்படத்தை பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது.

Advertisment

Advertisment

படக்குழு நேரடியாக டிஜிட்டலில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதால் திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது சித்தார்த் நாயகனாக நடித்துள்ள 'டக்கர்' படத்தையும் அமேசான் ப்ரைம் டிஜிட்டல் நிறுவனம் நல்ல விலை கொடுத்து வாங்கியுள்ளது. இப்படம் டிஜிட்டலில் விரைவில் வெளியாகவுள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை 'கப்பல்' பட இயக்குநர் ஜி.கிரிஷ் இயக்கியுள்ளார். அதிரடி சண்டைக் காட்சிகள் நிரம்பிய காதல் படமாக உருவாகியுள்ள 'டக்கர்' படத்தில் மஜிலி பட நடிகை திவ்யான்ஷா கெளசிக் நாயகியாக நடித்துள்ளார். அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.