Advertisment

தயாரிப்பாளராக மாறிய முன்னணி நடிகை!

vdbvdbdbd

Advertisment

பாலிவுட்டில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை டாப்சி கைவசம் 'சபாஷ் மிது', 'ராஷ்மி ராக்கெட்', 'டூபாரா', 'லூப் லபேடா' உள்ளிட்ட படங்கள் உள்ளன. இவை அடுத்தடுத்து விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் நடிகை டாப்சி புதிதாக பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்துக்கு ‘அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்’ என பெயரிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

"சினிமா மீதான எனது அன்பை வெளிப்படுத்துவதற்காக, நான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளேன். எனது பதினொரு வருட சினிமா வாழ்க்கையில் ரசிகர்கள் எனக்கு நிறைய அன்பையும், ஆதரவையும் அளித்துள்ளனர். என்னைப்போல் எந்த பின்னணியும் இன்றி வந்து சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு எனது ‘அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்’ பட நிறுவனத்தில் வாய்ப்பளிக்க உள்ளேன்” என கூறியுள்ளார்.

tapsee pannu
இதையும் படியுங்கள்
Subscribe