Advertisment

"எந்த படத்துக்கு இது நடக்கல " - டாப்ஸி கோபம்

taapsee pannu about negative review of his movie Dobaaraa

தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி. அந்த வகையில் தமிழில் ஜெயம் ரவியின் 'ஜன கன மன' படத்தில் நடித்துள்ளார். இதனிடையே அனுராக் காஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி நடித்துள்ள 'தோபாரா' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. மேலும் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு கலவையான விமர்சனமே அதிகம் கிடைத்தது. இப்படம் வெளியாவதற்கு முன்பு சமூக வலைத்தளத்தில் சில ரசிகர்கள் படத்துக்கு எதிராக கருது தெரிவித்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில் டாப்ஸி சமீபத்திய விழா ஒன்றில் பங்கேற்றபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டாப்ஸியிடம் ‘தோபாரா’ படத்துக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டாப்ஸி, "எந்த படத்துக்கு இது நடக்கல" என பதிலளித்தார். பின்பு தொடர்ச்சியாக டாப்ஸியிடம் கேள்வி கேட்க, உடனே டாப்ஸி "முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். பிறகு உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன். கேள்வி கேட்பதற்கு முன்பு ஹோம்வொர்க் பண்ணிட்டு வாங்க" என்று கோபமாக கூறினார். இவரது பேச்சு தற்போது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Bollywood taapsee pannu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe