Advertisment

Taapsee Pannu About his Marriage

டாப்ஸி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடி வந்துள்ளார். அப்போது, அவருடைய அடுத்த விடுமுறை பயணம் எங்கே, அடுத்த படங்களின் அப்டேட் என பலகேள்விகளை ரசிகர்கள் கேட்டுள்ளனர். அதில் ஒரு ரசிகர், "உங்கள் திருமணம் எப்போது" என கேள்வி கேட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த டாப்ஸி, "நான் இன்னும் கர்ப்பமாகவில்லை. எனவே விரைவில் திருமணம் வாய்ப்பில்லை" என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="fda9657d-2d96-44da-94ad-a54793bf53a3" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%20%281%29_16.jpg" />

பிபாஷா பாசு, நேஹா தூபியா மற்றும் ஆலியா பட் போன்ற நடிகைகள் திருமணமான சில வாரங்களுக்குப் பிறகு, திருமணம் மற்றும் கர்ப்பம் இரண்டையும் திடீரென அறிவித்தனர். அண்மையில் நடிகை இலியானாவும் முதலில் கர்ப்பத்தை அறிவித்து பின்பு காதலனை அறிவித்தார். ஆனால் திருமணத்தை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் டாப்ஸியின் பதில் இவர்களை மறைமுகமாகக் கிண்டலடிப்பது போன்று அமைந்துள்ளது. பேட்மிட்டன் வீரர் மத்தியாஸை டாப்ஸி காதலித்து வருவதாக ஒரு தகவல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

டாப்ஸி, தமிழில் ஜெயம் ரவியின் 'ஜன கன மன' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாவதில் தாமதமாகி வருகிறது. மேலும் இந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ராஜ்குமார் ஹிரானி இயக்கும் 'டன்கி' படத்தில் நடிக்கிறார். இப்படம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.