/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tapseeni.jpg)
உலகில் பிரபல பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, இந்தியாவில் முக்கியமான தொழிலதிபராகவும் இருக்கிறார். இவருடைய இளைய மகன் ஆனந்த் அம்பானிக்குகடந்த 13ஆம் தேதி வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள முக்கிய பிரபலங்கள், தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தம்பதியருக்கு வாழ்த்துகளைத்தெரிவித்தனர்.
இந்தியாவை பொறுத்தவரை, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஷாருக் கான், பூஜா ஹெக்டே, அட்லீ உள்ளிட்ட திரைப் பிரபலங்கள், பிரபல மல்யுத்த குத்து சண்டை வீரர் ஜான் சீனா, ஹாலிவுட் நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டனர். பல பிரபலங்கள் கலந்துகொண்டாலும், சிலர் இதில் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டனர். அதில், முக்கியமானவர் ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நாயகி டாப்ஸி.
பிரபல நடிகை டாப்ஸி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்திற்கு செல்லாதது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. திருமணங்கள் என்பது விருந்தளிக்க குடும்பத்திற்கும், விருந்தினருக்கும் இடையே தனிப்பட்ட உறவு இருக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன். அவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அதனால், விருந்தளிக்கும் குடும்பத்திற்கும், விருந்தினருக்கும் இடையே ஒருவிதமான தொடர்பு இருக்கும் திருமணத்திற்கு செல்லவே விரும்புகிறேன்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)