taapsee about Paparazzi

தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி. அந்த வகையில் இந்தியில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் அவர் கடந்த 15ஆம் தேதி அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘ஹேல் ஹேல் மெய்ன்’ (Khel Khel Mein) படத்தில் நடித்திருந்தார். தமிழில் ஜெயம் ரவியின் 'ஜன கன மன' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக கூறப்படும் நிலையில் சில காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை.

Advertisment

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் புகைப்படக் கலைஞர்கள் குறித்து காட்டமாக பேசியுள்ளார் டாப்ஸி. அவர் பேசியதாவது, “நான் தெளிவாக சொல்கிறேன். நான் பொது நபர். பொதுச் சொத்து கிடையாது. இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் எதை செய்தாலும் செய்யாவிட்டாலும் எப்போதும் ட்ரோல் செய்யப்படும் துறையைத் தேர்ந்தெடுத்துள்ளேன் என்பதைத் தாமதமாகத் தான் புரிந்து கொண்டேன். மக்கள் உங்கள் மீது நெகட்டிவாக விமர்சனம் முன்வைக்கிறார்கள் என்றால், ஓகே. எதோ ஒரு வகையில் அவர்களின் பொன்னான நேரத்தை எனக்கு செலவிடுகிறார்கள்” என்றார்.

Advertisment

டாப்ஸிக்கும் புகைப்பட கலைஞர்களுக்கும் தொடர்ச்சியாக வாக்கு வாதம் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் புகைப்பட கலைஞர்கள் எல்லை மீறி புகைப்படம் எடுக்க முயல்வதாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்திற்கும் ஆளாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.