t rajendran talk about simbu marriage

'வெந்து தணிந்தது காடு' படத்தைத்தொடர்ந்து 'பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இப்படத்தின் போஸ்ட் புரொடக்சஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே விஜய்யின் 'வாரிசு' படத்தில் சிம்பு பாடியுள்ள 'தீ தளபதி' பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனிடையேதெலுங்கில் நிகில் மற்றும் அனுபமா நடிப்பில் உருவாகியுள்ள '18 பேஜஸ்' படத்தில் 'டைம் இவ்வு பில்லா' பாடலைப் பாடியுள்ளார். இப்பாடல் கடந்த 5 ஆம் தேதி வெளியானது.

Advertisment

ad

இப்படி சினிமாவில் தொடர்ந்து முழுகவனத்தை செலுத்தி வரும்சிம்புவுக்கு எப்போது திருமணம்? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் அவ்வப்போது எழுந்து வருகிறது. இது தொடர்பாக அவரது தந்தையான டி.ராஜேந்தரை எங்குப் பார்த்தாலும், சிம்பு திருமணம் குறித்தகேள்வியை நிருபர்கள் எழுப்பி வருகிறார்கள்.

Advertisment

இந்நிலையில், டி.ராஜேந்தர் காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் தரிசனம் மேற்கொண்ட பிறகுசெய்தியாளர்களைச் சந்தித்தார். சிம்பு திருமணம்தொடர்பான கேள்விக்கு அவர் கூறியது, "என் மகனுக்குப் பிடித்த பெண்ணைநான் தேர்ந்தெடுப்பதை விட; என்மனைவி தேர்ந்தெடுப்பதை விட;சிம்புவுக்குப் பிடித்த மணமகளை;அந்தக் குலமகளை;திருமகளை இறைவன்தான் தேர்வு செய்ய வேண்டும். யாரைப்பார்த்தாலும் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லும் பதில்:இந்தக் கேள்வியை வழக்கறுத்தீஸ்வரரிடம் சொல்லிவிட்டேன். அதனால் அவரது அருளால் ரசிகர்களின் ஆதரவிலும் தமிழ்நாடு மக்களின் அன்பிலும் விரைவில் திருமணம் நடக்கும்" என்றார்.