Advertisment

மருத்துவ சிகிச்சை முடிந்து சென்னை திரும்பும் டி.ராஜேந்தர்

t Rajender returns to Chennai after medical treatment

இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்ட டி.ராஜேந்தர் கடந்த மே மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் டி. ராஜேந்தருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக கடந்த 14 ஆம் தேதி குடும்பத்துடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பிறகு டி.ராஜேந்தர் அங்கு ஓய்வில் இருந்து வந்தார். இதனிடையே தந்தையின் ஓய்வுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுத்துவிட்டு நடிகர் சிம்பு அண்மையில் சென்னை திரும்பியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் டி.ராஜேந்தர் இந்தியா திரும்பஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிகிச்சை முடிந்து நாளை (22.7.2022) அதிகாலை விமானத்தில்சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தனது மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாகவும்கூறப்படுகிறது.

Advertisment

actor simbu cm stalin T Rajendar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe