Advertisment

தலைவர் பதவியை ராஜினாமா செய்த டி.ராஜேந்தர்!

t rajender

Advertisment

சமீபத்தில் நடந்து முடிந்த 'தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்' சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் டி.ராஜேந்தர். அத்தேர்தலில் அடைந்த தோல்வியையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து 'தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்' என்ற புதிய சங்கத்தினை உருவாக்கினார். இச்சங்கத்தின் தலைவராக டி.ராஜேந்தர் பதவி வகித்து வந்தார். மேலும், அவர் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவ்விநியோகஸ்தர் சங்கத்தின் பொதுக்குழுடிசம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இச்சங்கத்தின் தலைவராக வகித்து வந்த பதவியிலிருந்து வெளியேற அவர் திட்டமிட்டிருந்த நிலையில், சங்கத்தின் உறுப்பினர்கள் அவரை பதவியில் தொடர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சங்கத்தின் விதிகளின் படி ஒரு பதவி மட்டுமே வகிக்க முடியுமென்பதால், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

t rajender
இதையும் படியுங்கள்
Subscribe