Advertisment

12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற டி.ராஜேந்தர்!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக முன்னமே அறிவித்திருந்தார்.

Advertisment

t rajendar

உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்தில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், 16 கமிட்டி உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு, நடிகர் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், விநியோகஸ்தர் அருள்பதி தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

Advertisment

ஓய்வு பெற்ற நீதிபதி பாட்ஷா முன்னிலையில், காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. நடிகர்கள் சரத்குமார், டி.ராஜேந்தர், ராதாரவி, நடிகைகள் ராதிகா, பூர்ணிமா பாக்யராஜ், இயக்குனர்கள் தங்கர் பச்சான், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்தனர். அதன் பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 235 வாக்குகள் பெற்று 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

T Rajendar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe