Skip to main content

''ராகவா லாரன்ஸிடம் கேட்டேன்... அவர் உடனே கொடுத்தார்..!'' - டி.ராஜேந்தர்

Published on 16/04/2020 | Edited on 16/04/2020


கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் கரோனா நிவாரண நிதிக்காக 3 கோடி ரூபாய் கொடுத்த ராகவா லாரன்ஸ், பிறகு மீண்டும் 25 லட்ச ரூபாயைத் தூய்மைப் பணியாளர்களுக்காக அளித்தார். இந்நிலையில் தற்போது விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் நிவாரண உதவியை லாரன்ஸ் அளித்துள்ளார். இந்த உதவி குறித்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரான டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... 

 

css

 

''வணக்கம்

 

நான் தற்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக இருக்கிறேன். எங்கள் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தினர் தொழில் செய்து நஷ்டமடைந்து நலிந்த நிலையில் இருக்கின்றனர். தொலைநோக்கு சிந்தனையோடு அவர்களுக்கு மாதா மாதம் எங்களால் முடிந்த ஒரு சின்ன உதவித் தொகையை வழங்க, நிதி திரட்ட திட்டம் தீட்டி வைத்திருந்தோம். அந்தத் திட்டத்தை மார்ச் முடிந்து ஏப்ரல் மாதம் தொடங்க இருந்தோம். அதன் தொடக்கமாக ஒரு தொகையை வழங்க பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் படம் எடுக்காமல் இருந்த நான் 'இன்னிசைக் காதலன்' என்ற படத்தை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருந்தேன்.

 

ஆனால் கரோனா பாதிப்பால், திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டது. திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டது. நாடெங்கும் ஊரடங்கு என்று கைகள் கட்டப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் நினைவுக்கு வந்தவர் என் நண்பரும் நடிகருமான திரு.ராகவா லாரன்ஸ் அவர்கள். என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர். இந்நிலையில் எங்கள் சங்கத்தின் நிலை குறித்த என் தர்மசங்கட நிலைமையை எடுத்துரைத்தேன். அவர் உடனே “அண்ணே, உங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்” என்றார். “தம்பி எனக்கு எதுவும் வேண்டாம். என் சங்கத்திலிருக்கும் நலிவடைந்தவர்களுக்காகச் செய்தால் போதும்” என்றேன். உடனே திரு.ராகவா லாரன்ஸ் மனமுவந்து எங்கள் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அறக்கட்டளைக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அனுப்பிவைத்தார்.
 

http://onelink.to/nknapp

 

நேற்று நடந்ததை இன்று மறந்துவிடும் இந்த உலகத்தில் கடந்த காலத்தை மறக்காத  அந்தக் கனிந்த உள்ளத்துக்கு நன்றி. அவரின் தர்ம சிந்தனையும், தயாள குணமும் தழைக்கட்டும். என் சார்பாகவும் எங்கள் சங்க நிர்வாகிகள் சார்பாகவும் அனைத்து சங்க உறுப்பினர்கள் சார்பாகவும் நன்றி. நண்பர் திரு.ராகவா லாரன்ஸ் போன்ற நல்ல மனிதநேயம் படைத்த நெருங்கிய திரையுலகத்தினரிடம் சங்க நல அறக்கட்டளைக்காக நிதி கேட்டு இருக்கிறேன். அவர்களும் தருவதாக வாக்களித்திருக்கிறார்கள். நலிவடைந்த விநியோகஸ்தர்களுக்கு கரோனா பாதிப்பு சமயத்தில் உதவுதோடு அல்லாமல் தொலை நோக்கு பார்வையோடு மாதா மாதம் ஒரு சின்ன உதவித்தொகை வழங்க முயற்சிக்கிறோம். 

 

இப்படிக்கு,
டி.ராஜேந்தர்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள்” -  ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
raghava lawrence request to give  chance to handihapped childrens

ராகவா லாரன்ஸ் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது விஜயகாந்த்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார்.  மேலும் லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்ததாக வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் படத்தில் நடிக்கவுள்ளார். 

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே நிறைய மக்களுக்கு நிதி, கல்வி எனப் பல்வேறு உதவிகளை லாரன்ஸ் வழங்கி வருகிறார். இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். ராகவா லாரன்ஸின்  ‘கை கொடுக்கும் கை’ மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில்,  ‘மல்லர் கம்பம்’ சாகச நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராகவா லாரன்ஸ், “என்னுடைய படங்களில் அதிகபட்சம் மாற்றுத் திறனாளி பசங்களை ஆடவைக்க முயற்சி செய்வேன். அவுங்களுக்கு நடனத்தை விட்டால் வேறு எதுவும் தெரியாது. வாழ்வாதாரமே நடனத்தில் தான் அடங்கியிருக்கு. ஆனால் கை கால்கள் இல்லை என்றாலும் கூட அவர்களின் தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கே சில சமயங்களில் மன அழுத்தத்தில் இருக்கும் போது பசங்கள கூப்பிட்டு 5 நிமிஷம் ஆடசொல்லி பார்ப்பேன். இவுங்களே இவ்ளோ சாதிக்குறாங்க. இதுக்கெல்லாம் அப்செட் ஆனா எப்பிடி-னு ரீசார்ச் பண்ணிப்பேன்.

சமீப காலமாக பசங்களுக்கு வாய்ப்பு கிடைக்காம இருந்தாங்க. நான் நடிக்கிற எல்லா படத்திலும் மாற்றுத் திறனாளி பசங்களை பயன்படுத்தலாம் எனச் சொல்லி தயாரிப்பாளரிடம் கேட்பேன். எல்லா இடத்திலும் அவுங்களையே ஆட வைச்சா ரிப்பீட் ஆகிற மாதிரி இருக்கு மாஸ்டர்னு சொல்வாங்க. எத்தனையோ தடவை நயன்தாரா, த்ரிஷா ஆடியதையெல்லாம் பார்க்கிறோம்ல சார், இந்தப் பசங்களையும் பார்ப்போம் எனச் சொல்வேன். இதற்கு ஒரு சிலர் ஒத்துப்பாங்க, ஒரு சிலர் வேண்டாம்னு சொல்லிவிடுவாங்க. வாழ்க்கையில் தன்னம்பிக்கை இல்லாமல் எவ்ளோ விஷயங்கள் நடக்குது. அது தற்கொலை வரை போகிறது. ஆனால் இந்தப் பசங்களைப் பார்த்து தற்கொலை செய்யும் எண்ணம் வரவங்க கத்துக்க வேண்டும்” என்றார். 

Next Story

அடுத்தடுத்து வெளியான அறிவிப்புகள் - பிஸியாகும் ராகவா லாரன்ஸ்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
raghava lawrence next with lokesh kanagaraj benz, ar murugados asoosociate venkat mohan in hunter

ராகவா லாரன்ஸ் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது விஜயகாந்த்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். படங்களில் நடித்துக் கொண்டே நிறைய ஏழை எளிய குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனிடையே விஜய் கட்டிய கோயிலுக்கு விஜய்யின் தாயார் ஷோபாவுடன் அண்மையில் சென்றிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.  

raghava lawrence next with lokesh kanagaraj benz, ar murugados asoosociate venkat mohan in hunter

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. முதலில் லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மேலும் வெளியிடவும் செய்கிறார். 

இப்படத்திற்குப் பின் அடுத்த படமாக, சத்ய ஜோதி மற்றும் கோல்டு மைன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் ஹண்டர் என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையாக இப்படம் வெளியாகவுள்ளது.