t rajendar has completely recovered

இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்ட டி.ராஜேந்தர் கடந்த மே மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் டி. ராஜேந்தருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக கடந்த 14 ஆம் தேதி குடும்பத்துடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடை பெற்றது.

Advertisment

இந்நிலையில் நடிகர் டி. ராஜேந்தர் தற்போது பூரண குணமடைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.மேலும் தந்தை டி.ராஜேந்தர் ஓய்வு எடுப்பதற்கான அனைத்து பணிகளையும் செய்து கொடுத்துவிட்டு படப்பிடிப்பிற்காக சிம்பு சென்னை திரும்பியுள்ளார். நடிகர் சிம்பு தற்போது என். கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment