t r

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலுள்ள தயாரிப்பாளர்களுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட தயாரிப்பாளர்கள் தனியாக வந்து, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒன்றை தொடங்கியுள்ளனர்.

Advertisment

இதனைதொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. அதில் டி.ஆர். மற்றும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். அந்த தேர்தலில் முரளி வெற்றிபெற்றார்.

Advertisment

இந்நிலையில், டி.ராஜேந்தர் தலைமையிலான அணியினர் புதிதாகச் சங்கம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 'தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற பெயரைப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சங்கம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.